/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர வீதிகளில் விதிமுறை மீறும் வாகனங்கள்; போக்குவரத்து போலீசார் கண்காணிக்கணும்
/
நகர வீதிகளில் விதிமுறை மீறும் வாகனங்கள்; போக்குவரத்து போலீசார் கண்காணிக்கணும்
நகர வீதிகளில் விதிமுறை மீறும் வாகனங்கள்; போக்குவரத்து போலீசார் கண்காணிக்கணும்
நகர வீதிகளில் விதிமுறை மீறும் வாகனங்கள்; போக்குவரத்து போலீசார் கண்காணிக்கணும்
ADDED : அக் 28, 2024 12:30 AM
உடுமலை : உடுமலை நகரில், விதிமுறை இல்லாமல் வாகனங்கள் நிறுத்துவோர் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தீபாவளியையொட்டி, உடுமலை நகரில் வணிக வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
நாள்தோறும் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். இதையொட்டி ரோட்டோரங்களில் தற்காலிகமாக கூடுதல் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,வாகனங்கள் நிறுத்தும் பிரச்னை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கும் வழியில்லாமல் இடையூறு ஏற்படுகிறது.
வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றாமல், ரோட்டின் பாதி வரை ஆக்கிரமித்து நிறுத்திவிட்டு கடைவீதிகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் பின்வரும் வாகனங்களும் விதிமுறை மீறி நிறுத்தப்படுகின்றன.
கார்களில் வருவோர், பார்க்கிங் இருக்கும் இடத்தில் நிறுத்தாமல், போக்குவரத்துக்கு இடையூறாக பல இடங்களில் நிறுத்திச்செல்கின்றனர்.
இதனால் அப்பகுதியிலுள்ள கடைகளுக்கு வருவோர் மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டுநர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில், பஸ் ஸ்டாண்டில் துவங்கி பழைய பஸ் ஸ்டாண்ட் வரையிலும், மீண்டும் தளி ரோட்டில் குட்டைத்திடல் வரையிலும், கச்சேரி வீதி, பசுபதி வீதி, வ.உ.சி., வீதிகளிலும் பார்க்கிங் பிரச்னை ஏற்படுகிறது.
பொள்ளாச்சி ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம், தொடர்ந்து வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமிக்கின்றன. பஸ்சுக்கு செல்வதற்கு பயணியர் ரோட்டை கடப்பதற்கும் முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
மழைநீரும் தேங்கி நிற்பதால், மக்கள் வேறுவழியில்லாமல் சேற்றிலும் சகதியிலும் இறங்கி நடக்க வேண்டி வருகிறது.
போக்குவரத்து போலீசார், நகர வீதிகளில் பண்டிகை முடியும் வரை சிறப்பு கவனம் செலுத்தி, விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.