தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விசர்ஜன ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்

விசர்ஜன ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்

விசர்ஜன ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்


ADDED : செப் 15, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை திருப்பூரில் நடக்கிறது. காலை, 8:00 முதல் இரவு, 10:00 மணி வரை கனரக வாகனங்கள் திருப்பூர் மாநகரில் நுழையவோ அல்லது நகரிலிருந்து வெளியே செல்லவோ அனுமதியில்லை. ஊர்வலப் பாதையை பொறுத்தும், ஊர்வல நேரத்தில் மாலை வாகனங்கள் செல்ல மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி வெளியிட்ட அறிக்கை:

அவிநாசி ரோடு

அவிநாசி பைபாஸ் ரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் பூண்டியிலிருந்து பூலுவபட்டி, நெருப்பெரிச்சல் மற்றும் கூலிபாளையம் நான்கு ரோடு வழியாக செல்லலாம். ஊர்வலத்தின் போது அவிநாசி ரோட்டிலிருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் அனைத்தும், 60 அடி ரோட்டில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி அருகில் பயணிகளை இறக்கி விட்டு புஷ்பா சந்திப்பு பஸ் ஸ்டாப் வழியாக செல்லலாம்.

திருப்பூர் மாநகரத்துக்குள் வணிக தொடர்பான வாகனங்கள் அனைத்தும் அவ்வப்போது போலீசாரால் அறிவிக்கப்படும் உத்தரவுகளுக்குகேற்ப மாற்றியமைக்கப்பட்ட வழிகளில் செல்ல வேண்டும்.

பெருமாநல்லுார் ரோடு

பெருமாநல்லுார் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்வதை தவிர்த்து, பூலுவபட்டி பிரிவிலிருந்து வலதுபுறம் திரும்பி பூண்டி ரிங்ரோடு வழியாக பூண்டியை சந்திப்பை அடைந்து இடது புறம் திரும்பி அவிநாசி ரோட்டிலிருந்து, திருப்பூர் நோக்கியும், இடது புறம் திரும்பி நெருப்பெரிச்சல், கூலிபாளையம் நான்கு ரோடு வழியாக காங்கயம், தாராபுரம் மற்றும் ஊத்துக்குளி செல்லலாம்.

தாராபுரம் ரோடு

தாராபுரம் ரோட்டிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் அனைத்து வணிக தொடர்பான வாகனங்களும் கோவில்வழி, பெருந்தொழுவு, முத்தணம்பாளையம் வழியாக காங்கயம் ரோடு செல்ல வேண்டும். காங்கயம் ரோட்டிலிருந்து தாராபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள், உஷா தியேட்டர் சிக்னல் சந்திப்பில் திரும்பி மத்திய பஸ் ஸ்டாண்ட், சந்தைபேட்டை, வீரபாண்டி பிரிவு சென்று, பலவஞ்சிபாளையம் வழியாக தாராபுரம் ரோடு அடையலாம்.

காங்கயம் ரோடு

காங்கயம் ரோடு வழியாக நல்லுார், முத்தணம்பாளையம் சந்திப்பிலிருந்து திருப்பூர் நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் ராஜீவ் நகர் வழியாக, அவிநாசி ரோடு செல்லலாம். தாராபுரம் ரோட்டிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் வணிக தொடர்பான இலகுரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் பலவஞ்சிபாளையம் பிரிவிலிருந்து வீரபாண்டி பிரிவு வழியாக செல்ல வேண்டும்.

பல்லடம் ரோடு

பல்லடம் ரோட்டிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் அனைத்து கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் வீரபாண்டி பிரிவு வழியாக மங்கலம் ரோடு செல்ல வேண்டும். இந்த மாற்றம் தவிர, சூழ்நிலைக்கு ஏற்ப சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதால் மக்களும், வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேமாம்.

இவ்வாறு கமிஷனர் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us