
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் ஆகியன சார்பில், இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம், திருப்பூர், பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப்,ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது.
கண் பாதுகாப்பு குறித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 228 பேர் பங்கேற்றனர். இவர்களில், 31 பேர் உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். 114 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சத்ய சாய் சேவா மையத்தில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது; அடுத்த முகாம், ஜூலை 6ல் நடக்கிறது.