ADDED : பிப் 05, 2024 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை இலவச கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில், நேற்று நடந்த முகாமில், மொத்தம், 243 பேர் பங்கேற்றனர்; 91 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 39 பேர் உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அடுத்த முகாம், மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது.

