தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வைட்டமின் 'ஏ' திரவம் இன்று முதல் வினியோகம்

 வைட்டமின் 'ஏ' திரவம் இன்று முதல் வினியோகம்

 வைட்டமின் 'ஏ' திரவம் இன்று முதல் வினியோகம்


ADDED : பிப் 22, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: வைட்டமின் '-ஏ' சத்துக் குறைபாடு மற்றும் நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின் -'ஏ' திரவம் வழங்கும் முகாம் சுகாதாரத்துறை சார்பில், இன்று துவங்கி வரும், 28 வரை (புதன் தவிர) ஐந்து நாட்கள் நடக்கிறது.

திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள, 1.04 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் '-ஏ' திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்திகூர்மைக்கு வைட்டமின்-ஏ சத்து, மிகவும் இன்றியமையாதது. கண் பார்வை பாதிக்கப்படாமல் இருக்க இத்திரவம் மிகவும் அவசியமானது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வைட்டமின் '-ஏ' திரவம் வழங்குவதனால், எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் ஆறு மாதம் முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு, ஒரு மில்லி அளவும், ஓராண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரண்டு மில்லி அளவும் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் '-ஏ 'திரவம் கொடுத்து பயன் பெற வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us