/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டு வங்கியை அடையாளம் காணலாம்
/
ஓட்டு வங்கியை அடையாளம் காணலாம்
ADDED : டிச 20, 2025 09:12 AM
அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:
எஸ்.ஐ.ஆர்., பணியின் வாயிலாக லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 20 சதவீத்துக்கு மேல், தகுதியுள்ள வாக்காளர்களாக இருக்கும்வாய்ப்புண்டு.
எஸ்.ஐ.ஆர்., படிவம் நிரப்புவதில் ஏற்பட்ட குழப்பம் உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள், விடுபட்டிருக்கலாம். பல இடங்களில் அரசியல் கட்சி நிர்வாகிகள், வாக்காளர்களிடம் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வழங்கி, கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு, அவர்களது ஆதார் அட்டை நகலை இணைத்துதங்கள் வசம் எடுத்து சென்றுவிட்டனர்; அவர்கள் அதை பூர்த்தி செய்தும் கொடுத்துள்ளனர்.
அத்தகைய பல விண்ணப்பங்களில், 2002ம் ஆண்டைய அவர்களது பெற்றோர் விவரம் இடம் பெறவில்லை. இதனால், அவர்களது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது, வரும் நாட்களில் தெரிய வரும். மேலும், எஸ்.ஐ.ஆர்., பணி வாயிலாக, ஒவ்வொரு பூத் வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அலசி ஆராயும் போது, அரசியல் கட்சிகளுக்கான ஓட்டு வங்கி நிலவரத்தையும் அறிய முடியும்.
எனவே, எஸ்.ஐ.ஆர்.க்கு பின் வெளியிடப்பட்ட இந்த வாக்காளர் பட்டியலை சாதுர்யமாக, நுணுக்கமாக கையாளும் பட்சத்தில், பூத் வாரியாக அரசியல் கட்சிகளுக்கான ஓட்டு வங்கியையும் உறுதிப்படுத்த முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

