தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வளர்ச்சி திட்டங்கள் அளித்த தி.மு.க.வுக்கே உங்கள் ஓட்டு ;வேட்பாளர் தினேஷ்குமார் வேண்டுகோள்

 வளர்ச்சி திட்டங்கள் அளித்த தி.மு.க.வுக்கே உங்கள் ஓட்டு ;வேட்பாளர் தினேஷ்குமார் வேண்டுகோள்

 வளர்ச்சி திட்டங்கள் அளித்த தி.மு.க.வுக்கே உங்கள் ஓட்டு ;வேட்பாளர் தினேஷ்குமார் வேண்டுகோள்


ADDED : ஏப் 15, 2026 08:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 08:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:''திருப்பூரின் வளர்ச்சிக்கு திட்டங்கள் அளித்தது தி.மு.க. அரசு. திருப்பூர் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி கருதி தி.மு.க.வுக்கு ஆதரவளியுங்கள்,'' என்று தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் பிரசாரம் செய்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதியில், தி.மு.க. கூட்டணியில் தினேஷ்குமார் தி.மு.க சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மாநகராட்சியில் காங்கயம் நகர், சத்தியமூர்த்தி நகர், கான்வென்ட் நகர், ஜெய் நகர், காசி நகர், காஞ்சி நகர், மணியகாரம்பாளையம், பொன்முத்து நகர், நல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து பிரசாரத்தில் பேசியதாவது:

நல்லுார் மண்டலத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகள் கடந்த, 4 ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விஜயாபுரம் குளத்தோட்டத்தில் வடிகால், ஜெய் நகர் மற்றும் விரிவு பகுதியில், 2 கோடி ரூபாய் மதிப்பில் கால்வாய் கட்டப்படுகிறது. 46வது வார்டு பகுதியில் காங்கயம் ரோடு வரையிலும், 49வது வார்டு, ஆர்.வி.இ. நகர் முதல் மணியகாரம்பாளையம் வரை, 3 கோடி ரூபாய் மதிப்பிலும், கணபதிபாளைம் முதல் பள்ளக்காட்டு புதுார் வரை, 2.75 கோடி ரூபாய் மதிப்பிலும் வடிகால் அமைக்கப்படுகிறது. இது போல் எண்ணற்ற வளர்ச்சித் திட்ட மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மகளிர் நலன் கருதி சுய உதவிக்குழுக்களுக்கு அதிக சுழல் நிதி, இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள், மருத்துவ முகாம்கள், காப்பீட்டு திட்டம் என பல திட்டங்களை தி.மு.க. அரசு அளித்துள்ளது. இத போன்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

----

.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us