தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாக்காளர் படிவம் பதிவேற்றும் பணி தீவிரம்

 வாக்காளர் படிவம் பதிவேற்றும் பணி தீவிரம்

 வாக்காளர் படிவம் பதிவேற்றும் பணி தீவிரம்


ADDED : நவ 29, 2025 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 07:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரில், வாக்காளரிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட தீவிர திருத்த படிவங்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணியில் அரசு ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டுவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் உள்ளனர். பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்களுக்கு, படிவம் பிரின்ட் செய்யப்பட்டு, கடந்த 4ம் தேதி முதல், பி.எல்.ஓ.,க்கள், வீடு தேடிச் சென்றுவழங்கினர்.

தீவிர திருத்த படிவங்களை பூர்த்தி செய்து பெற்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு, வரும் டிச. 4 கடைசிநாள். ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் வாக்காளர்கள் மட்டுமே, டிச. 9ல் வெளியாகும் வரைவு பட்டியலில் இடம் பெறுவர்.

வாக்காளர்களிடமிருந்து படிவங்களை பூர்த்தி செய்து பெற்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில், தேர்தல் பிரிவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் பிரிவினருக்கு பக்கபலமாக, வருவாய்த்துறை, கூட்டுறவு, வேளாண், தோட்டக்கலை உள்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்களும் களமிறங்கியுள்ளனர்.

வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்படும் தீவிர திருத்த படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், இரண்டாவது தளத்திலுள்ள அறை எண்: 240 கூட்ட அரங்கில், கடந்த ஆறு நாளாக, தீவிர திருத்த படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு அலுவலர்கள், வாக்காளர்கள் வழங்கிய படிவங்களில் உள்ள தரவுகளை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை, இரவு பகலாக மேற்கொண்டுவருகின்றனர். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் பகுதி வாக்காளர்களின் படிவங்கள் கையாளப்படுகின்றன. காலை மற்றும் மாலை என இரண்டு ஷிப்ட்டாக பிரித்து, காலையில் பெண் ஊழியர் 100 பேர், மாலையில் ஆண் ஊழியர்கள் 100 வீதம் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

படிவம் பூர்த்தி செய்து வழங்கும் அனைத்து வாக்காளரையும், எவ்வித விடுபடுதல்களும் இன்றி, துல்லியமாக வரைவு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற முனைப்போடு, தினமும், காலை, 10:00 மணி முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை பணிபுரிந்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us