/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் குளறுபடி; கள ஆய்வுக்கு புதிய யோசனை
/
வாக்காளர் பட்டியல் குளறுபடி; கள ஆய்வுக்கு புதிய யோசனை
வாக்காளர் பட்டியல் குளறுபடி; கள ஆய்வுக்கு புதிய யோசனை
வாக்காளர் பட்டியல் குளறுபடி; கள ஆய்வுக்கு புதிய யோசனை
ADDED : ஏப் 10, 2025 11:56 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., கமிட்டி முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் பூத் ஏஜன்ட்கள் என, இருவருமே மக்களிடம் நேரடி தொடர்பில் இருப்பதால், வாக்காளர் விபரங்களை முழுமையாக அவர்களால் அறிந்துகொள்ள முடியும்.
இருவரும் இணைந்து வார்டு வாரியாக கள ஆய்வில் ஈடுபட்டால், 15 நாளுக்குள் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியை சேர்ந்த வாக்காளர் விவரங்களையும் கண்டறிந்துவிட முடியும்.
ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரது பெயரை சேர்க்க, பழைய ரேஷன் கார்டில் உள்ள அவரது பெயரை நீக்க வேண்டும். அதே நடைமுறையில், ஒரு வாக்காளரின் பெயர், புதிய இடத்தில் பதிவு செய்யும் போது, பழைய முகவரியில் உள்ள அவரது பெயரை நீக்க வேண்டும்.