/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
ADDED : நவ 24, 2024 11:15 PM

உடுமலை; உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியலை பார்வையாளர் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் நடந்து வரும், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்த பணிகளை, மாவட்ட பார்வையாளரான கதர் கிராம தொழில்கள் வாரிய முதன்மை செயல் அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
அவர், உடுமலை சட்டசபை தொகுதி, பெரியபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் சின்னவீரம்பட்டி ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த முகாம்களை ஆய்வு செய்தார்.
அதே போல், மடத்துக்குளம் தொகுதியில், தாந்தோணி மற்றும் துங்காவி ஒன்றிய துவக்கப்பள்ளிகளிலுள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த முகாமை ஆய்வு செய்தார். உடுமலை கோட்டாட்சியர் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.