/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டத்தில் எட்டு தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அலுவலர் நியமனம்
/
மாவட்டத்தில் எட்டு தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அலுவலர் நியமனம்
மாவட்டத்தில் எட்டு தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அலுவலர் நியமனம்
மாவட்டத்தில் எட்டு தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அலுவலர் நியமனம்
ADDED : ஜூன் 06, 2025 06:19 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கும், தனித்தனியே வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடவடிக்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் விரிவான ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு நடத்தி வந்தது. ஒரு தொகுதிக்கு ஒரு வாக்காளர் பதிவு அலுவலர் என்ற வகையில் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பதிவு பணிகளை மேற்கொள்ள, சப் கலெக்டர் அல்லது கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும், தேர்தல் நடவடிக்கையை தெளிவாக மேற்கொள்ளவும் ஏதுவாக, ஒரு தொகுதிக்கு ஒருவர் வீதம், வாக்காளர் பதிவு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், துணை கலெக்டர் நிலை அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்னர்.
திருப்பூர் ஆர்.டி.ஓ., - திருப்பூர் வடக்கு தொகுதி, தாராபுரம் ஆர்.டி.ஓ., - தாராபுரம், உடுமலை ஆர்.டி.ஓ., - உடுமலை, உதவி கமிஷனர் (கலால்) - காங்கயம், மாநகராட்சி கமிஷனர் - திருப்பூர் தெற்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் - பல்லடம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் - மடத்துக்குளம், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் - அவிநாசி தொகுதிக்கு, நிரந்தர வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.