/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பெயர் சேர்ப்பு; நாளை சிறப்பு முகாம்
/
வாக்காளர் பெயர் சேர்ப்பு; நாளை சிறப்பு முகாம்
ADDED : நவ 14, 2024 08:50 PM
உடுமலை ; தேர்தல் கமிஷன் வாயிலாக, வாக்காளர்கள் தங்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற ஏதுவாக நாளை (16ம் தேதி) மற்றும், 17 ம் தேதி அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
பொதுமக்கள் முகாம் நடக்கும் நாட்களில், தங்கள் குடியிருப்பு அருகில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை சென்று படிவம் 6, 7 மற்றும், 8 ஆகியவற்றை அளிக்கலாம்.
http://voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், VOTER HELP LINE APP என்ற மொபைல் செயலியிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைத்துக் கொள்ளலாம். வரும், 23, 24ல் சிறப்பு முகாம் மேற்கண்ட இடங்களில் நடக்கும்.
இத்தகவலை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் இத்தகவலை தெரிவித்துள்ளார்.