/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம சபை கூட்டத்தில் வாக்காளர் தின உறுதிமொழி
/
கிராம சபை கூட்டத்தில் வாக்காளர் தின உறுதிமொழி
ADDED : ஜன 22, 2025 08:06 PM
உடுமலை; குடியரசு தின கிராம சபைக்கூட்டத்தில், தேசிய வாாக்காளர் தின உறுதிமொழி எடுப்பதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடக்க உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமாக, 13 ஒன்றியங்களில், 265 கிராம ஊராட்சிகள் உள்ளன. குடியரசு தினத்தன்று காலை, 11:00 மணி அளவில், அனைத்து ஊராட்சிகளிலும் கூட்டம் நடக்கிறது. குடியரசு தின கிராம சபைக்கூட்டம் நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம் ஒன்றிய நிர்வாகங்களுக்கு வழிமுறைகளை வழங்கியுள்ளது.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியில் தணிக்கை அறிக்கை, டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து பேசுவது,
மக்கள் திட்டமிடல் இயக்கம் வாயிலாக, 2025 - 26 நிதியாண்டிற்கான, கிராம வளர்ச்சி திட்டத்துக்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்களை, முக்கியமானதாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஜன., 25ம் தேதி சேதிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசு தின கிராம சபைக்கூட்டத்தில், வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பதற்கும் அறிவுறுத்தியுள்ளது.