ADDED : ஏப் 22, 2026 07:52 PM
உடுமலை: தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி, பஞ்சலிங்க அருவிக்குச்செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை, ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. கோடை காலத்திலும், திருமூர்த்திமலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில், சீரான நீர் வரத்து இருக்கும்.
எனவே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கோடை காலத்தில், பஞ்சலிங்க அருவிக்கு, சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி, அனைத்து நிறுவனங்களுக்கும், விடுமுறை அளிக்க, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த விடுமுறையில், ஓட்டளிக்காமல் சுற்றுலா தலங்களுக்கு, மக்கள் செல்வதை தடுக்கும் வகையில், சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வகையில், ஓட்டுப்பதிவு நாளான இன்று, பஞ்சலிங்க அருவிக்குச்செல்ல, சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
