/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர் ஆய்வு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர் ஆய்வு
ADDED : டிச 14, 2025 07:52 AM
திருப்பூர்: திருப்பூரில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரி பார்ப்பு பணி நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. அதன் ஒருகட்டமாக அனைத்து பகுதியிலும் ஓட்டுப்பதிவு மெஷின்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் துவங்கியுள்ளன.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள ஓட்டுப்பதிவு மெஷின்கள் சரிபார்ப்பு பணி நேற்று நடைபெற்றது. இணை தலைமை தேர்தல் அலுவலர், எஸ்.எஸ்.பால் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள, ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பறையில் ஆய்வை மேற்கொண்டார்.
கலெக்டர் மனிஷ் நாரணவரே, தேர்தல் உதவியாளர் புஷ்பாதேவி ஆகியோர், மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகள், ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் ஓட்டுச் சாவடிகள் விவரம், இருப்பில் உள்ள மெஷின்கள் விவரம், அவற்றின் நிலை, பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் இணை தேர்தல் கமிஷனரிடம் அதிகாரிகள் விளக்கினர். அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

