sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூலி விவகாரம்: விசைத்தறியாளர் ஆலோசனை

/

கூலி விவகாரம்: விசைத்தறியாளர் ஆலோசனை

கூலி விவகாரம்: விசைத்தறியாளர் ஆலோசனை

கூலி விவகாரம்: விசைத்தறியாளர் ஆலோசனை


ADDED : பிப் 20, 2025 06:12 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசியில் ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில், விசைத்தறி உரிமையாளர்கள் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அவிநாசி தலைவர் முத்து சாமி தலைமை வகித்தார். தெக்கலுார் தலைவர் பொன்னுச்சாமி பேசினார்.

மத்திய மாநில அரசு அதிகாரிகளையும், ஜவுளி துறை சார்ந்த அதிகாரிகளையும் தொடர்ந்து 32 முறைக்கு மேல் நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தியும் விளக்கியும் உள்ளோம். இதுவரை எந்தவித முன்னேற்றமும் விசைத்தறியாளர்களுக்கு கிடைக்கவில்லை.

கடந்த 2022ம் ஆண்டு கலெக்டர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கூலி உயர்வு அமலானது. சில மாதங்களிலேயே ஜவுளி உரிமையாளர்கள் கொடுத்த கூலியை குறைத்து விட்டனர்.

மின்கட்டணம், தொழில் சார்ந்த பிற துறை கூலி உயர்வால் விசைத்தறியாளர்கள் இழப்பீட்டை சரி செய்ய முடியாமல் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் நாளை(21ம் தேதி) சோமனுார் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு அவிநாசி விசைத்தறி உரிமையாளர்கள் ஒத்துழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து நடைபெறும் கூட்டத்தில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

இதில் ராவுத்தம்பாளை யம், துலுக்க முத்துார், சாமந்தன்கோட்டை, நம்பியாம்பாளையம், கருவலுார், சேவூர், ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தெக்கலுார் நிர்வாகி சண்முகசுந்தரம் ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us