ADDED : பிப் 16, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தி வருகின்றனர். ஆன்லைனில் செலுத்தும் முறை இருந்த போதும், பெரும்பாலான பொதுமக்கள் அலுவலகத்தில் நேரடியாக செலுத்துவதையே விரும்புகின்றனர்.
சமீப நாட்களாக, 'சர்வர்' கோளாறு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் வரி செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால், வரி செலுத்த வரும் பொதுமக்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. வரிவசூல் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்கள் கால் கடுக்க காத்திருந்து அவதிப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
எனவே, நீண்ட நாட்களாக உள்ள 'சர்வர்' பிரச்னையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.