தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/காத்திருந்து... பொறுத்திருந்து...

காத்திருந்து... பொறுத்திருந்து...

காத்திருந்து... பொறுத்திருந்து...


ADDED : ஜன 09, 2024 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2024 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:ரேஷன் கடையில் பொங்கல் பரிசாக வழங்கும் கரும்பு திருப்பூர் வந்தது. ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை தலா, 500 ரூபாய் நோட்டாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது. இதில் முதல் கட்டமாக தகுதியான ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசும், ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்க நேற்று அரசு உத்தரவிட்டது.

கரும்பு வந்தது


திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களிலிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கரும்புகள் லாரிகளில் திருப்பூர் கொண்டு வரப்பட்டது. கூட்டுறவு சங்க அலுவலகம் வந்து சேர்ந்த கரும்புகள், அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு சரக்கு வேன் மற்றும்ஆட்டோக்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

ரொக்கம் தயார்


அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், பொங்கல் பரிசு வழங்க உத்தர விடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் வழங்க வேண்டிய ஆயிரம் ரூபாய் ரொக்கமும், உரிய கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை முழுமையாக 500 ரூபாய் நோட்டுகளாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கூட்டுறவு சங்கங்கள் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலம் இதை தயார் செய்து வைத்துள்ளன.இன்று 10ம் தேதி முதல் இது பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us