/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமூக விரோதக் கூடாரமாக நடை மேம்பாலம்; பேனர் மறைத்ததால் அரங்கேறிய கொடூரம்.. பதைபதைக்குதே நெஞ்சம்!
/
சமூக விரோதக் கூடாரமாக நடை மேம்பாலம்; பேனர் மறைத்ததால் அரங்கேறிய கொடூரம்.. பதைபதைக்குதே நெஞ்சம்!
சமூக விரோதக் கூடாரமாக நடை மேம்பாலம்; பேனர் மறைத்ததால் அரங்கேறிய கொடூரம்.. பதைபதைக்குதே நெஞ்சம்!
சமூக விரோதக் கூடாரமாக நடை மேம்பாலம்; பேனர் மறைத்ததால் அரங்கேறிய கொடூரம்.. பதைபதைக்குதே நெஞ்சம்!
ADDED : ஜன 31, 2024 11:57 PM

திருப்பூர் : திருப்பூரில் உள்ள நடை மேம்பாலத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. விளம்பர பேனர்கள் மறைத்திருப்பதால், சமூக விரோதிகளுக்கு சாதகமாகிவிடுகிறது. பார்க் ரோடு நடை மேம்பாலத்தில் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பூரில், பிரதான ரோடுகளில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அவிநாசி ரோடு, குமரன் ரோடு, காங்கயம் ரோடு உள்ளிட்ட சில இடங்களில் ரோடுகளை கடக்க பாதசாரிகள்மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
தவிர்க்கும் மக்கள்
இதன் காரணமாக, மாநகராட்சி சார்பில், புஷ்பா சந்திப்பு, பார்க் ரோடு, டவுன்ஹால், ரயில்வே ஸ்டேஷன், நல்லுார் போன்ற இடங்களில் பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்ல நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில், சிலர் நடை மேம்பாலத்தை பயன்படுத்த துவங்கினர். ஆனால், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் மது அருந்துவது, போதையில் துாங்குவது போன்ற செயல்களால் தவிர்க்க ஆரம்பித்தனர்.
நாளடைவில், அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர், நடைமேம்பாலங்களில் விளம்பர பேனர்களை வைக்க ஆரம்பித்தனர். இதனால், பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டதால் பயன்படுத்தாமல் விட்டனர்.
இதை முறையாக கண்காணிக்காமல், பராமரிக்காமல் விட்ட காரணத்தால், தற்போது சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறிவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெண்ணிடம் அத்துமீறல்
பார்க் ரோட்டில் உள்ள நடைமேம்பாலத்தில் நேற்று முன்தினம் ரோட்டோரம் வசித்து வரும், 35 வயது பெண்ணை, சிலர் மதுபோதையில் அழைத்து கொண்டு மேலே சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட பிரச்னையில், பெண்ணை தாக்கியும், அத்துமீறலில் ஈடுபடவும் முயன்றனர். இதை பார்த்த, பாலத்தில் துாங்கி கொண்டிருந்த முதியவர் தட்டி கேட்டார். அவரையும் தாக்கியுள்ளனர்.
போதை ஆசாமி, இருவர் தப்பி சென்றனர். காயமடைந்த முதியவர் மற்றும், 35 வயது பெண்ணை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பேனரை அகற்றலாமே...!
சமீப காலமாக நடை மேம்பாலத்தை விளம்பர பேனர்கள் ஆக்கிரமித்து கொள்வதால், மேம்பாலத்தை பயன்படுத்த மக்கள் பெரும் அச்சப்பட்டு வருகின்றனர். தனியாக செல்லும் பெண்களை, போதை ஆசாமிகள் கிண்டல் செய்வது, சீண்ட முயற்சி செய்வது, இரவு நேரங்களில் வழிப்பறி போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
எனவே, மக்களின் நலன் கருதி பாரபட்சமின்றி, நடைமேம்பாலத்தில் உள்ள விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும்.