/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாலிபால் அணியில் இடம் பிடிக்கணுமா?
/
வாலிபால் அணியில் இடம் பிடிக்கணுமா?
ADDED : அக் 21, 2024 04:05 AM
திருப்பூர், : தமிழ்நாடு வாலிபால் கழக துணை சேர்மன் அறிக்கை: வேலுாரில் வரும் நவ., 2 முதல், 5 வரை மூன்று நாட்கள் மாநில ஆண்கள் வாலிபால் போட்டி நடக்கிறது.
இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட வாலிபால் அணித்தேர்வு திருப்பூர், காலேஜ் ரோடு, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில், வரும், 27ம் தேதி, காலை, 8:00 முதல், 10:00 மணி வரை நடக்கிறது. போட்டிக்கு முன்பாக ஆதார், அல்லது பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
2002 ஜன., 1க்கு பிறந்தவர் மட்டுமே அணித்தேர்வில் பங்கேற்க முடியும். மாவட்டத்தில் உள்ள சிறப்பாக வாலிபால் விளையாடும் வீரர்கள், கிளப் வீரர்கள் பங்கேற்கலாம். பதிவுக்கு 98946 89941 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.