/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எச்சரிக்கை பலகைகள் மாயம்; நெடுஞ்சாலையில் சிக்கல்
/
எச்சரிக்கை பலகைகள் மாயம்; நெடுஞ்சாலையில் சிக்கல்
ADDED : ஜூன் 13, 2025 09:41 PM
உடுமலை; தேசிய நெடுஞ்சாலையில், தகவல் மற்றும் எச்சரிக்கை பலகைகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் ஆற்றுப்பாலம் முதல் கோலார்பட்டி வரையிலான பகுதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை உடுமலை பிரிவின் கீழ் பராமரிக்கப்படுகிறது.
வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில், முக்கிய நகரங்களின் தொலைவு, கிராம ரோடுகள் சந்திப்பு, விபத்து பகுதிகள், குறுகிய பாலங்கள் உட்பட தகவல் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டது.
வாகன ஓட்டுநர்களுக்கு உதவியாக இருக்கும் இந்த தகவல் பலகைகள் முறையாக பராமரிக்கப்படாமல், பல இடங்களில், காணாமல் போயுள்ளன; எச்சரிக்கை பலகை இல்லாததால், சில நேரங்களில், விபத்துகளும் ஏற்படுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், தகவல் மற்றும் எச்சரிக்கை பலகைகளை சீரமைக்க வேண்டும்; தேவைப்படும் இடங்களில், புதிதாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.