/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோரம் 'போம்' கழிவுகள்; சுகாதார சீர்கேடு உத்தரவாதம்
/
சாலையோரம் 'போம்' கழிவுகள்; சுகாதார சீர்கேடு உத்தரவாதம்
சாலையோரம் 'போம்' கழிவுகள்; சுகாதார சீர்கேடு உத்தரவாதம்
சாலையோரம் 'போம்' கழிவுகள்; சுகாதார சீர்கேடு உத்தரவாதம்
ADDED : ஜூன் 02, 2025 06:22 AM

திருப்பூர் : திருப்பூர் எம்ப்ராய்டரிங் நிறுவனங்களில், துணிகளில் எம்ப்ராய்டரி 'போம்' எனப்படும் கெட்டியான காகித துணி போன்ற பொருள் பயன்படுத்தப்படுகிறது.
பணி முடிந்ததும், பின்புறம் உள்ள 'போம்' பிரித்து எடுத்து, கழிவாக வெளியேற்றப்படுகிறது. இவற்றை மாநகராட்சி துாய்மை பணியாளரிடம் ஒப்படைத்து, பாதுகாப்பாக வெளியேற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சில நிறுவனங்கள், 'போம்'கழிவை எடுத்துவந்து, குப்பையில் கொட்டுவதால், திடக்கழிவு மேலாண்மை பணி பாதிக்கப்படுகிறது. லட்சுமி நகர் அடுத்த முல்லைவீதியில், ரோட்டோர குப்பையுடன், 'போம்' கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்று வீசும் போது, போம் கழிவு ரோடு முழுவதும் பரவுகிறது; சில நேரம் அருகே உள்ள கடைகளில் புகுந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
மாநகராட்சி நிர்வாகம், 'போம்' கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி, இத்தகைய சீர்கேட்டை தடுக்க வேண்டும்.