/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளத்து கரையில் கொட்டப்படும் கழிவுகள்
/
குளத்து கரையில் கொட்டப்படும் கழிவுகள்
ADDED : செப் 05, 2025 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ஏழுகுள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்கள் வாயிலாக, 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், நேரடி பாசனம் பெறுகின்றன. இதில், உடுமலை நகரை ஒட்டி, 90 ஏக்கர் பரப்பில், ஒட்டுக்குளம் அமைந்துள்ளது. திருமூர்த்தி அணையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில், இக்குளத்துக்கு, தண்ணீர் திறக்கப்படுகிறது.
நகரின் அருகில் இருப்பதால், கட்டுமான கழிவுகள் உட்பட அனைத்து கழிவுகளும், நேரடியாக கொட்டப்படுகிறது. பொதுப்பணித்துறையினர், அருகிலுள்ள ஊராட்சி நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து, கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.