/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கோபுரம்
/
முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கோபுரம்
ADDED : அக் 14, 2025 12:53 AM

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், திருப்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி நெருங்கியுள்ள நிலையில், திருப்பூரின் பிரதான ரோடுகளில் துணிக்கடைகள், பர்னிச்சர் கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பிரதானமான குமரன், பல்லடம், காங்கயம், காமராஜர் உள்ளிட்ட ரோடுகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நேற்று முன்தினம் காலை முதலே கூட்டம் அதிகம் இருந்தது. இதே நிலை நேற்றும் தொடர்ந்தது.
கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை பயன்படுத்தி குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது. 'மப்டி'யில் போலீசார் கண்காணிப்பு மேற்கொள்கின்றனர்; மாநகரில் முக்கிய பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி சுறு சுறுப்பாக நடக்கிறது. மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நேற்று கண்காணிப்பு கோபுரத்தை போலீசார் அமைத்துள்ளனர். அந்த கோபுரத்தில், 'சிசிடிவி' கேமராக்களும் பொருத்தப்பட உள்ளது.
மேலும், குமரன் ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட ரோட்டோரம் தடுப்புகள் மாதிரி, முனிசிபல் ஆபீஸ் ரோட்டில் பேரிகார்டு மூலம் தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர்.