/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடையை சமாளிக்க நீர் மோர் பந்தல் துவக்கம்
/
கோடையை சமாளிக்க நீர் மோர் பந்தல் துவக்கம்
ADDED : மார் 28, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், சிகரம் பவுண்டேஷன் சார்பில், 7வது ஆண்டு நீர் மோர் பந்தல் துவக்க விழா நடந்தது
.திருப்பூர் - பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், மாகாளியம்மன் கோவில் அருகில், நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. சிகரம் பவுண்டேஷன் தலைவர் பொன்னுசாமி, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி, சேவையை துவக்கி வைத்தார். சிகரம் பவுண்டேஷன் செயலாளர் செல்வராஜ், அம்மன் பேஷன் சிவகுமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.