/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வாட்டர் பெல்' திட்டம் பள்ளிகளில் தீவிரம்
/
'வாட்டர் பெல்' திட்டம் பள்ளிகளில் தீவிரம்
ADDED : ஜூலை 04, 2025 10:14 PM

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில், 'வாட்டர் பெல் ' திட்டத்தையொட்டி, மாணவர்கள் குடிநீர் எடுத்துக்கொள்வதற்கு இடைவெளி விடுவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி செல்லும் மாணவர்கள் போதுமான அளவு குடிநீர் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால், நீர்சத்து குறைந்து விரைவில் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், தொலைதுாரத்திலிருந்து வரும் குழந்தைகள் பஸ்சுக்கு காத்திருக்கும் நேரங்களிலும், இப்பிரச்னையால் மயக்கமடைந்து விடுகின்றனர். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு, போதுமான அளவு குடிநீர் எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 'வாட்டர் பெல்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில், தண்ணீர் குடிப்பதற்கு மணி அடிக்கப்படுகிறது.
உடுமலை ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் குடிநீர் எடுத்துகொள்வது குறித்து, ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, காலை, 11:00 மணி, மதியம், 1:00 மணி, மாலை, 3:00 மணிகளில் மணி அடிக்கப்பட்டு மாணவர்கள் குடிநீர் அருந்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து இவ்வாறு பின்பற்றுவதற்கு தலைமையாசிரியர் தங்கவேல், ஆசிரியர் கல்பனா குடிநீர் அருந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.