ADDED : ஏப் 24, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்; காங்கயம், ஊதியூர் மலை, 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த மலையில் குரங்குகள், மான்கள், முயல், மயில், காட்டுபன்றி, மரநாய்கள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளது.
போதிய மழை பெய்யாத காரணமாக, கோடை வெயிலில் வன விலங்குகள் தண்ணீரை தேடி வேறு இடங்களுக்கு செல்கிறது. அதே நேரத்தில், குடியிருப்பு பகுதிகளுக்கு வர வாய்ப்பு அதிகம்.
கடந்த சில நாட்களாக ஊதியூர் காப்பு காட்டில் வன விலங்குகள் தாகத்தை தீர்க்க, காங்கயம் வனத்துறை அலுவலர்கள், தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், விலங்குகளுக்கு எளிதில் தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்தனர்.