/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : டிச 19, 2024 11:37 PM

உடுமலை; உடுமலையில், பிரதான குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது.
உடுமலை நகராட்சி, தளி ரோடு, யூனியன் ஆபீஸ், நெடுஞ்செழியன் காலனி பகுதியில், நகராட்சி குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்தது. அதை சரிசெய்ய தோண்டப்பட்ட குழியும் மூடப்படாமல் பணிகள் நடக்காமல் உள்ளது. இதனால், பல மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது.
அப்பகுதியில், குளம் போல் தேங்கியுள்ளதோடு, தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாக்கடையில் கலந்து வருகிறது.
மேலும், சாக்கடை கால்வாய் அருகில் உள்ளதால், குழாயில் கழிவு நீரும் கலந்து வருவதால், அப்பகுதி மக்களுக்கு தரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படும் அவல நிலை உள்ளது.
எனவே, குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.