/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் வீணாகிறது... சாலையும் சேதமாகிறது!
/
தண்ணீர் வீணாகிறது... சாலையும் சேதமாகிறது!
ADDED : நவ 04, 2024 10:52 PM

எரியாத விளக்கு
திருப்பூர், 55 வது வார்டு, வெள்ளியங்காடு, ஈஸ்வரமூர்த்தி நகர் மூன்றாவது வீதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை.
- ராமமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி நகர்.
திருப்பூர் மாநகராட்சி, 55வது வார்டு, கோபால் நகர், 4வது வீதியில் தெருவிளக்கு ஒரு மாதமாக எரிவதில்லை. இதனால், தெருவில் பெண்கள்
நடமாட அச்சமாக உள்ளது.
- வந்தனா, கோபால் நகர்.
அகற்றாத குப்பை
திருப்பூர், பல்லடம் ரோடு, காட்டுவளவு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றுவதில்லை.
- சண்முகசுந்தரம், காட்டுவளவு.
திருப்பூர், 46வது வார்டு, மணியாரம்பாளையம், ஈ.பி., ஆபீஸ் எதிர்புறம், இ.எஸ்.ஐ., நகரில் குப்பை தேங்கியுள்ளது. முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. குப்பை அகற்றுவதில்லை
- சேக் மைதீன், மணியாரம்பாளையம்.
கழிவுநீரால் அவதி
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஜெய்வாபாய் ஸ்கூல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, அடிக்கடி கழிவுநீர் தேங்குகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- சத்தியன், காதர்பேட்டை. (படம் உண்டு)
பாதுகாப்பற்ற நிலை
திருப்பூர் - பல்லடம் ரோட்டில், அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இயக்கப்படுகிறது. அதிகாரிகள் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜான், வீரபாண்டி. (படம் உண்டு)
குப்பை அள்ளுங்க...
திருப்பூர், கோபால் நகர், 60 அடி ரோடு, பெட்ரோல் பங்க் வீதியில் தேங்கியுள்ள குப்பை அள்ள வேண்டும். சாலையின் பாதி வரை குப்பை உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியவில்லை.
- தங்கராஜ், கோபால் நகர். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், பெரியகடை வீதியில் குழாய் உடைந்து இரண்டு மாதமாக தண்ணீர் வீணாகிறது. மாநகராட்சியில் புகார் தெரிவித்தும், இதுவரை சரிசெய்யவில்லை. சாலையும் சேதமாகி வருகிறது.
- விக்னேஷ், பெரியகடை வீதி. (படம் உண்டு)
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர், சாலையில் வீணாகிறது. சாலை சேதமாகும் முன், குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு)
சேதமான சாலை
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, அணைக்காடு பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி, சாலை குழியாகி விட்டது. வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.
- நாகராஜன், அணைக்காடு. (படம் உண்டு)
பல்லாங்குழி சாலை
திருமுருகன்பூண்டி, தன்வர்ஷினி அவென்யூவில் தார் ரோடு போட வேண்டும். ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
- குமார், திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)
ரியாக் ஷன்
குப்பை அகற்றம்
தென்னம்பாளையம் கிழக்கு, நாவிதன் தோட்டம் முதல் வீதியில் குப்பை தேங்கியிருந்தது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனால், குப்பை அகற்றப்பட்டுள்ளது.
- புஷ்பவதி, நாவிதன் தோட்டம். (படம் உண்டு)
சீரானது சாலை
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ரயில்வே பாலம் கீழ் சாலை சேதமாகி, குண்டும் குழியுமாக இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தியால், நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைத்தனர்.
- தங்கமணி, ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)