/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் குழாய் உடைப்பு வாரியத்தினர் சீரமைப்பு; 'தினமலர்' செய்தி எதிரொலி

ADDED : அக் 17, 2024 10:18 PM

உடுமலை : 'தினமலர்' செய்தி எதிரொலியாக, கொங்கல்நகரம் உள்ளிட்ட இடங்களில், குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளுக்கும், திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதில், பொட்டையம்பாளையம் நீருந்து நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது.
குறிப்பாக, கொங்கல்நகரம் கிராமத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால், குடிநீர் வீணாகி, வீடுகளின் முன் தேங்கி நின்றது.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில், 'தாகம் அங்கே; வீணாகுது இங்கே' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதையடுத்து, குடிநீர் வடிகால் வாரியத்தினர், திட்ட பராமரிப்பு ஒப்பந்ததாரர் வாயிலாக உடைப்பை சீரமைத்து, கிராமங்களுக்கு தடைபட்டிருந்த குடிநீர் வினியோகத்தை துவக்கினர். இதேபோல், பொன்னேரி உள்ளிட்ட இடங்களிலும், பிரதான குழாய் உடைப்பு நேற்று சீரமைக்கப்பட்டது.