ADDED : செப் 19, 2025 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; சனுப்பட்டியில் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து, குடிநீர் பல நாட்களாக வீணாகி வருகிறது.
குடிமங்கலம் ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சிக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஊராட்சிக்குட்பட்ட சனுப்பட்டி கிராமத்தில், கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து குடிநீர் உப்பாறு ஓடையில் வீணாக செல்கிறது.
இதைக்கண்ட மக்கள் வேதனையடைந்துள்ளனர். எனவே, குடிநீர் வடிகால் வாரியத்தினர்
குழாய் உடைப்பை சீரமைத்து, வினியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.