/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தொலைநோக்குடன் குடிநீர் திட்டம்'
/
'தொலைநோக்குடன் குடிநீர் திட்டம்'
ADDED : பிப் 12, 2024 01:00 AM

திருப்பூர்;திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்தை அமைச்சர் உதயநிதி நேற்று துவக்கிவைத்தார். மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:
புதிய குடிநீர் திட்டம் மொத்தம் 1,120.57 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தலைமை நீரேற்று நிலையம், மின் நிலையம், மோட்டார், சுத்திகரிப்பு நிலையம் வரை 19.83 கி.மீ., நீளம் குழாய் பதிப்பு பணிகள் 120 கோடி ரூபாய்; குருக்கிலிபாளையத்தில், தொழில் அமைப்புகள் மூலம் பொதுமக்கள் பங்களிப்பாக 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் பெறப்பட்டது. அங்கு 19.6 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் மையம், சர்வதேச தரத்தில், நவீன கருவிகள் பொருத்தி கட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 85.44 கோடி ரூபாய்.
திருப்பூரில் குடிநீர் பகிர்மான மண்டலங்களில் இரு மண்டலங்களில் உள்ள தொட்டிகள் வாயிலாக 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில், 61 கி.மீ., நீளத்துக்கு பகிர்மான குழாய்; 8,400 இணைப்புகள் ஆகியன 41 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 10 முதல் 15 நாள் என்ற அளவில் வழங்கப்பட்ட குடிநீர் இனி 3 நாளுக்கு ஒருமுறை என்ற அளவில் முதல் கட்டத்திலும், விரைவில் தினமும் குடிநீர் சப்ளை என்ற அடிப்படையிலும் வழங்கப்படும்.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இப்பணியில் தங்கள் முழு முயற்சியை செலவிட்ட அதிகாரிகளை அமைச்சர் பாராட்டி மேடையில் கவுரவித்து பெருமைப்படுத்தினார்.இவ்வாறு, அவர் கூறினார்.