/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி
/
காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி
காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி
காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி
ADDED : பிப் 13, 2025 09:57 PM
உடுமலை ; உடுமலை சுற்றுப்பகுதியில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட, குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பழுதடைந்து காட்சிப்பொருளாக மாறிவருகின்றன.
அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, மாணவர்களின் கல்வி மேம்பாடு அடைய வாய்ப்புள்ளது.
மேலும், அரசு பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை மற்றும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென பெற்றோர் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். கல்வித்துறையின் சார்பிலும், இதுகுறித்து அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் மட்டுமே, கட்டாயம் வழங்கப்பட வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., பொது நிதிகளில், அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதற்கான கருவி பொருத்தப்பட்டது.
ஆனால், உடுமலை சுற்றுப்பகுதியில், 80 சதவீத பள்ளிகளில், இந்த கருவி பயன்பாட்டில் இல்லை. கருவி பொருத்தப்பட்ட சில மாதங்களில், பழுதடைந்துள்ளது. பழுதடைந்த கருவியை சரிபார்க்க, பள்ளி நிர்வாகத்தினர் பலமுறை விண்ணப்பித்தாலும் யாரும் வருவதில்லை. இதனால், பல பள்ளிகளில் இக்கருவி காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது.
இக்கருவிகள் தரமில்லாமல் வழங்கப்படுவதால், விரைவில் பழுதடைந்துவிடுகிறது. மழை காலங்களில், குழந்தைகளுக்கு துாய்மையான குடிநீர் வழங்குவதற்கு, இக்கருவி பெரிதும் பயனளித்தது.
தற்போது அவை, விரைவில் பழுதடைந்து வருவதால், மீண்டும் புதிய கருவி வாங்குவதற்கும் ஆசிரியர்கள் முன்வருவதில்லை.
மாணவர்கள், இதனால், அந்தந்த பகுதிகளில் குழாயிலிருந்து வரும் குடிநீரையே நேரடியாக பருகுகின்றனர். இதன் காரணமாக, மாணவர்களுக்கும் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பள்ளிகளில் இக்கருவிகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். அரசும், கல்வித்துறையும் உடனடியாக தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

