/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாசனத்துக்கு மீண்டும் நீர் திறப்பு: பி.ஏ.பி. விவசாயிகள் நிம்மதி
/
பாசனத்துக்கு மீண்டும் நீர் திறப்பு: பி.ஏ.பி. விவசாயிகள் நிம்மதி
பாசனத்துக்கு மீண்டும் நீர் திறப்பு: பி.ஏ.பி. விவசாயிகள் நிம்மதி
பாசனத்துக்கு மீண்டும் நீர் திறப்பு: பி.ஏ.பி. விவசாயிகள் நிம்மதி
ADDED : செப் 01, 2025 07:26 PM

உடுமலை:
பிரதான கால்வாய் கசிவால், உடுமலை கால்வாயில் நிறுத்தப்பட்ட பாசன நீர் மீண்டும் நேற்று காலை திறக்கப்பட்டது.
பி.ஏ.பி.,நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 68 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, ஜூலை, 27ல் நீர் திறக்கப்பட்டது.
135 நாட்களில், உரிய இடைவெளி விட்டு, மொத்தம், 9,500 மில்லியன் கனஅடி நீர் வழங்க திட்டமிடப்பட்டது. இரண்டாம் சுற்று பாசனம் தற்போது நடைபெற்று வருகிறது.
பிரதான கால்வாயில், 73வது கி.மீ., செஞ்சேரி புத்துார் பகுதியில், சில நாட்களுக்கு முன் கால்வாய் நீர் கசிவு அதிகரித்தது. பராமரிப்புக்காக கடந்த, 27ம் தேதி, பிரதான கால்வாயில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதோடு, உடுமலை கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில், நேற்று பிரதான கால்வாயில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. உடுமலை கால்வாயிலும் வழக்கம் போல், பாசன நீர் திறக்கப்பட்டது. இதனால், பாசன விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.