தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தண்ணீர் பற்றாக்குறை புடலை உற்பத்தி பாதிப்பு

தண்ணீர் பற்றாக்குறை புடலை உற்பத்தி பாதிப்பு

தண்ணீர் பற்றாக்குறை புடலை உற்பத்தி பாதிப்பு


ADDED : மார் 14, 2024 12:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 12:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம் : பல்லடம் அருகே, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, புடலை உற்பத்தி பாதிக்கப்பட்டு, விவசாயி ஒருவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், மைக்கேல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், 45; விவசாயி. பல்லடம் அடுத்த, ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில், கடந்த, 15 ஆண்டுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். இரண்டு மாதத்துக்கு முன் புடலை சாகுபடி செய்தார். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, புடலை

விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெயராஜ் கூறியதாவது:

குத்தகைக்கு விவசாயம் செய்து வருகிறேன். இரண்டு ஏக்கரில், கடந்த டிச., மாதம் நீள புடலை சாகுபடி செய்தேன். அறுவடைக்கு தயாராக காய்கள் விளைச்சல் ஏற்பட்டு வந்த நிலையில், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் குளவி தாக்குதல் காரணமாக, புடலை காய்கள் சுருங்கி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், உற்பத்தி பாதியாக குறைந்தது. சாதாரணமாக, ஏக்கருக்கு, 32 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.

தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் குளவி தாக்குதலால், 16 முதல் 18 டன் வரை மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளது. இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ள நிலையில், உற்பத்தி பாதிக்கப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இனி பருவமழை பெய்யும் வரை, சாகுபடி செய்யாமல் இருப்பதே நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us