ADDED : அக் 01, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சிக்கு, நான்காவது குடிநீர் திட்டத்தில் குடிநீர் பெற்று வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பிரதான குழாய்கள் அமைக்கப்பட்ட இடங்களில் ரோடு விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பணியில் பிரதான குடிநீர் குழாய்களின் வால்வுகள் மாற்றி அமைக்கப்படவுள்ளது. இதற்காக, வரும், 3ம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்படுகிறது. அதனால், மாநகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை இருக்காது. இதன் காரணமாக குடிநீர் பெறுவது குறைந்து, உரிய இடைவெளியில் குடிநீர் வழங்குவது தடைப்படும். பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்தும், சிக்கனமாகப் பயன்படுத்தியும், மாநகராட்சி நிர்வகாத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.