ADDED : மார் 22, 2025 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : மகாஸ் டிரேடர்ஸ் நிறுவனம் சார்பில், 2ம் ஆண்டு நீர்மோர் பந்தல் சேவை துவங்கப்பட்டது.
திருப்பூர் நடராஜா தியேட்டர் முன்பாக, நீர்மோர் பந்தல் அமைத்து, தினமும் நீர்மோர் வழங்கி வருகின்றனர். சுபாஷ் பள்ளி தாளாளர் சிந்து சுப்பிரமணியம் மற்றும் சாந்தி ஆகியோர், பொதுமக்களுக்கு, நீர்மோர் வழங்கும் சேவையை துவக்கி வைத்தனர். மகாஸ் டிரேடர்ஸ் நிறுவனத்தினர் உடனிருந்தனர். கோடை வெயில் அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு, மேலும் சில வாரங்களுக்கு இலவச நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.