ADDED : ஆக 04, 2025 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் ஒன்றியம், அனுப்பட்டி கிராமத்தில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
சில மாதங்களாக, குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் சரிவர சப்ளையாக வில்லை. அத்திக்கடவு பிரதான குடிநீர் குழாயில் இருந்து, தனியார், முறைகேடாக குழாய் அமைத்து, குடிநீர் திருடப்பட்டு வந்ததாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.
பல மாதங்களாக நடந்து வந்ததாக கூறப்படும் இந்த நீர் திருட்டு குறித்து, மக்கள் அளித்த புகாரின் பேரில், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பி.டி.ஓ., கனகராஜ் கூறுகையில், ''பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முறைகேடாக வழங்கப் பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும்,'' என்றார்.