ADDED : மே 08, 2026 04:53 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர், சோளிபாளையம் விரிவு மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர் பொதுமக்கள் மற்றும், 15 -வேலம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஊருடையம்மன் கோவில் கமிட்டியினர் இணைந்து, நீர் மோர் பந்தல் அமைத்து, கோடை வெப்பத்தின் தாக்கம் தணிய, மக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், இதில், சிட்டி வெங்கடாசலம், கோவில் கமிட்டி தலைவர் சேகர், பாட்டையப்பன் நகர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் தங்கராஜ், நீர் மோர் வழங்கினார்.
மகின், ஹஸ்விதா, ஜனனி, பிரஜின் மற்றும் ஆஷ்லின் உள்ளிட்ட சிறுவர், சிறுமியர் ஆகியோர், ஆர்வத்துடன் நீர் மோர் வழங்கும் சேவையை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குட்டி கிருஷ்ணன் செய்திருந்தார்.
