/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை பகுதிகளில் தர்ப்பூசணி சாகுபடி ஒரு சில வாரங்களில் அறுவடை
/
உடுமலை பகுதிகளில் தர்ப்பூசணி சாகுபடி ஒரு சில வாரங்களில் அறுவடை
உடுமலை பகுதிகளில் தர்ப்பூசணி சாகுபடி ஒரு சில வாரங்களில் அறுவடை
உடுமலை பகுதிகளில் தர்ப்பூசணி சாகுபடி ஒரு சில வாரங்களில் அறுவடை
ADDED : ஜன 22, 2026 05:30 AM

உடுமலை: உடுமலை பகுதிகளில், கோடை கால விற்பனையை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்பட்டிருந்த தர்ப்பூசணி அறுவடைக்கு தயாராக உள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில், பி.ஏ.பி., பாசனம், அமராவதி பாசனம், கிணறு மற்றும் போர்வெல்லை நீராதாரமாகக்கொண்டு, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
கோடை கால சீசனை இலக்காக வைத்து, தர்பூசணி சாகுபடியிலும், கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை சுற்றுப்புற பகுதிகளான, தாந்தோனி, சின்னவீரம்பட்டி, மருள்பட்டி, கண்ணமநாயக்கனுார், கணக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், தற்போதைய சீசனில், தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடை காலம் துவங்க உள்ள நிலையில், இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட தர்ப்பூசணி அறுவடைக்கு தயாராக உள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: மல்ஷிங் ஷீட், மேட்டுப்பாத்தி அமைத்து, நுண்ணீர் பாசனத்தில், தண்ணீர் பாய்ச்சுவதால், சாகுபடியில், தண்ணீர் தேவை வெகுவாக குறைகிறது; களைகளையும் எளிதாக அகற்றலாம். ஏக்கருக்கு, அதிகபட்சமாக, 20 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது.
சில ஆண்டுகளாக, வரத்து அதிகரிப்பு, வீண் வதந்தி, விற்பனை சரிவு உள்ளிட்ட காரணங்களினால், தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதித்தனர். நடப்பாண்டும், இப்பகுதிகளில் குறைந்தளவு தர்ப்பூசணி சாகுபடி செய்யப்பட்டு, ஒரு சில வாரங்களில் அறுவடை செய்ய தயாராக உள்ளது.
மழை குறைவு, முன்னதாகவே துவங்கியுள்ள வெயில் காரணமாக, தேவை அதிகரித்து, இந்தாண்டு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.

