ADDED : ஏப் 14, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பில், வக்ப் வாரிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தெற்கு தொகுதி தலைவர் குமார் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அபிநயா, பல்லடம் தொகுதி பொறுப்பாளர் ரத்தின மனோகர், மாநில தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.