UPDATED : ஜூன் 21, 2026 06:50 PM
ADDED : ஜூன் 21, 2026 06:32 PM
வழிகாட்டி நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாக மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஜெயஸ்ரீ, முதலிபாளையம்: நான் தேர்வு செய்துள்ள எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் என் கட்--ஆப்க்கு ஏத்த காலேஜ் பத்தி நிபுணர்கள் மூலமா தெளிவான விளக்கம் கிடைச்சுது.
பிரணிகா, நெசவாளர் காலனி: எந்த காலேஜ், என்ன குரூப் எடுக்கிறதுன்னு இருந்த குழப்பமெல்லாம் கல்வியாளர்கள் கொடுத்த விளக்கத்தால தீர்ந்து, இப்போ நல்ல முடிவெடுக்க வழி பிறந்திருக்கு.
கமலேஷ், கே.செட்டிபாளையம்: கவுன்சிலிங் முறை மற்றும் லேட்டஸ்ட் டெக்னாலஜியோடு நல்ல வேலை வாங்கித் தர்ற பெஸ்ட் காலேஜ் எதுன்னு இங்க வந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்.
ஸ்ரீ நந்த் (சேவூர்): மெக்கானிக்கல் குரூப் எடுத்திருக்கேன்; ஆன்லைன் கவுன்சிலிங்ல என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றணும்னு முழுசா புரிஞ்சுக்கிட்டேன்.
தங்கவேல், திருமுருகன்பூண்டி: பெற்றோர்களோட ஒட்டுமொத்த சந்தேகங்களுக்கும் வல்லுனர்கள் நேர்ல விளக்கம் கொடுத்தது நிம்மதியா இருக்கு; இத்தகைய நிகழ்ச்சிகளை, 'தினமலர்' தொடர்ந்து நடத்தணும்.
பூங்கொடி (பொங்கலுார்): சோஷியல் மீடியா தகவல்களை விட, இங்க நிபுணர்கள் நேர்ல கொடுத்த விளக்கம் ரொம்பவே பயனுள்ளதாவும், நம்பகமானதாவும் இருந்தது.
