/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாடிக்கையாளர் விரும்பும் வகையில், நமது தயாரிப்புகளை வழங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும்

ADDED : செப் 02, 2024 01:03 AM

திருப்பூர் பனியன் தொழில் நடைமுறைகளை அறிந்து, அவற்றை எப்படியெல்லாம், மேம்படுத்தலாம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். படித்து முடித்தோம்; தொழில் நடத்துகிறோம் என்று இருந்துவிடக்கூடாது.
என் குடும்பத்தை சேர்ந்த தாத்தா பழனிசாமி, அப்பா மணிகண்டன் ஆகியோர், பனியன் தொழிலை வெற்றிகரமாக நடத்தினர். இனி, நானும் எனது கல்வியறிவை பயன்படுத்தி, 'ஆன்லைன்' வர்த்தகம் வாயிலாகவும் தொழிலை விரிவாக்க முயற்சித்து வருகிறேன்.
கடந்த, 2016ல் எம்.பி.ஏ., படித்து முடிந்ததும், பனியன் தொழிலை கவனிக்க துவங்கினேன்; அதற்கு பிறகுதான், எங்கள் நிறுவனத்தின், 'பிராண்ட்'டை வெளியே கொண்டுவரும் முயற்சி வேகமெடுத்தது. 'டிஜிட்டல் மார்க்கெட்' மூலமாகவும், பனியன் வர்த்தகத்தை கொண்டு செல்லலாம்.
திருப்பூர் என்றாலே, பனியன் நகரம் என்ற பெயர் இருந்தது. தற்போது, பல்வேறு மாநிலங்களிலும், இத்தொழில் கால்பதித்துவிட்டது. இதன்காரணமாக, நாம் அடுத்தகட்ட மாற்றங்களுக்கு தயாராக வேண்டும்.
இதுவரை, வாடிக்கையாளர் திருப்பூரை தேடி வந்து கொண்டிருந்தனர்; தற்போது, நாம் வர்த்தகர்களை தேடி சென்று கொண்டிருக்கிறோம்.
வாடிக்கையாளர் விரும்பும் வகையில், நமது தயாரிப்புகளை வழங்கினால் மட்டுமே, போட்டி நிறைந்த வர்த்தகத்தில் வெற்றி பெற முடியும்.