தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்'

 'வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்'

 'வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்'


ADDED : மார் 04, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: 'பறவை, விலங்கினங்கள் இன்றி மனிதர்களால் பூமியில் வாழ முடியாது; வன உயிரினங்களை நேசித்து பாதுகாக்க வேண்டும்,' என, மாணவர்கள் மத்தியில் வனவர் பிரேமா பேசினார்.

உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை பார்வையிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் சிக்கண்ணா கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு - 2 சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னாள் மாணவர் பிரதிநிதி மது கார்த்திக் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியர், நஞ்சராயன் குளத்தில் பறவைகளை பார்வையிட்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று வனவர் பிரேமா பேசுகையில், ''மனிதர்கள் அனைவரும், பறவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை நேசிக்கவேண்டும். பறவைகள், விலங்குகள் இன்றி, இந்த உலகில் மனிதர்களால் வாழமுடியாது.

பறவைகள், அதிக மரங்களை நடவு செய்து, பூமியின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றுகின்றன. வன விலங்குகளின் வாழ்விடங்களை அழிக்க கூடாது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us