ADDED : ஆக 03, 2025 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை அருகே தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை மற்றும் பொள்ளாச்சி தாலுகா எல்லையில், தேவனுார்புதுார் உள்ளது. இந்த ஊர் இரண்டு தாலுகாவிலுள்ள பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாகவும் இருந்து வருகிறது.
இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், வரும் பஸ்கள் நிறுத்த இடமின்றியும், திரும்பும் போது பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, உடுமலை ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி சார்பில் தேவனுார் புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.