ADDED : ஆக 22, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அருகே பெதப்பம்பட்டி உள்ளது. இந்த ஊரில், உடுமலை - தாராபுரம் ரோடு, பொள்ளாச்சி - தாராபுரம் ரோடு சந்திக்கிறது. பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது.
இங்கு பஸ் நிறுத்தம் மட்டும் உள்ளதால், அங்கு வரும் பஸ்கள் நிறுத்த இடமின்றி ரோட்டில் நிறுத்த வேண்டியதுள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே, அங்கு மாவட்ட நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.