sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்பால் சுருங்கும் உப்பாறு ஓடையை  மீட்கணும்!: சீமை கருவேல மரங்கள் அதிகரிப்பால் கவலை

/

ஆக்கிரமிப்பால் சுருங்கும் உப்பாறு ஓடையை  மீட்கணும்!: சீமை கருவேல மரங்கள் அதிகரிப்பால் கவலை

ஆக்கிரமிப்பால் சுருங்கும் உப்பாறு ஓடையை  மீட்கணும்!: சீமை கருவேல மரங்கள் அதிகரிப்பால் கவலை

ஆக்கிரமிப்பால் சுருங்கும் உப்பாறு ஓடையை  மீட்கணும்!: சீமை கருவேல மரங்கள் அதிகரிப்பால் கவலை


ADDED : மார் 09, 2026 05:55 AM

Google News

ADDED : மார் 09, 2026 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை அருகே, 50க்கும் அதிகமான கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமான உப்பாறு ஓடையானது ஆக்கிரமிப்பு மற்றும் சீமை கருவேல மரங்கள் அதிகரிப்பால், சுருங்கி மழைக்காலத்திலும் நீரோட்டம் தடைபட்டு வருகிறது. ஒரே நீராதாரமும் அவல நிலையில் உள்ளதால், உப்பாறு படுகையில் வறட்சி நிரந்தரமாகி வருகிறது. குடிமங்கலம் வட்டாரத்தில், 22,100 ஹெக்டேர் சாகுபடி நிலங்கள் உள்ளன. அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக உப்பாறு ஓடை மட்டுமே உள்ளது.

பல்வேறு கிராமங்களில் உருவாகும், 50க்கும் மேற்பட்ட மழை நீர் ஓடைகள், ஒருங்கிணைந்து, பெரிய உப்பாறு ஓடையாக மாறி உப்பாறு அணைக்கு நீர்வரத்து அளித்தன.

வடகிழக்கு பருவமழை காலத்தில், இந்த ஓடையில் அதிக நீரோட்டம் இருக்கும். மேலும், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து, உப்பாறு அணைக்கு அரசூர் ஷட்டரில் இருந்து உப்பாறு ஓடை வாயிலாக அரசாணை அடிப்படையில், தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இவ்வாறு, பல ஆயிரம் ெஹக்டேர் விளைநிலங்களின் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், வழியோர கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருந்த உப்பாறு ஓடை, பரிதாப நிலையில் உள்ளது.

உப்பாறு ஓடை முழுவதும், சீமை கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ளது. கரை மற்றும் நீரோட்ட பகுதி இருப்பதே தெரியாத அளவுக்கு அதிகரித்துள்ள இம்மரங்களால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் தண்ணீர் தேங்குவதில்லை. கோடை காலத்தில், மேய்ச்சல் நிலமாக இருந்த ஓடைக்குள் தற்போது, எவ்வித கால்நடைகளும் செல்ல முடிவதில்லை.

பிரதான கால்வாயில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும், உப்பாறு அணைக்கு முழுமையாக செல்வதில்லை.

இவ்வாறு, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை, உப்பாறு ஓடையில் முற்றிலுமாக அகற்ற வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். வழியோர கிராமங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளும், பொதுப்பணித்துறையினரும் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சீமை கருவேல மரங்களை அகற்ற, தமிழக அரசால் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போதும், உப்பாறு ஓடை கண்டுகொள்ளப்படவில்லை.

இந்நிலையில், உப்பாறு ஓடையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது. கரை சரிந்துள்ளதால், தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி, ஓடையின் நீரோட்ட பாதையை சிதைத்து வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படவில்லை உப்பாறு படுகை விவசாயிகள் கூறியதாவது: குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள ஒரே முக்கிய நீராதாரமான உப்பாறு ஓடை அவல நிலைக்கு மாறியுள்ளதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, நிலத்தடி நீர்மட்டம் இப்பகுதியில் சரிந்து, கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் இல்லாமல், தென்னை உள்ளிட்ட சாகுபடிகளை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வறட்சியால், ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி அகற்றினோம்.

இருப்பினும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல ஆயிரம் ெஹக்டேரில் விவசாயத்தை பாதுகாக்கவும், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவும் உப்பாறு ஓடையை மீட்பது அவசியமாகும்.

அரசூர் ஷட்டர் முதல் உப்பாறு அணை வரை, முழுமையாக ஓடையில், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோட்ட பகுதியை சீரமைப்பது அவசியமாகும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us