/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வன்முறையை தடுக்கும் பொறுப்பு வேண்டும்'
/
'வன்முறையை தடுக்கும் பொறுப்பு வேண்டும்'
ADDED : நவ 18, 2024 06:34 AM
பல்லடம் ; கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
தமிழகத்தில் போலீசாருக்கே பாதுகாப்பு பெற்ற சூழல் நிலவுகிறது. மது அருந்திவிட்டு போலீசாரையே தாக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. விருதுநகரில், போலீசாரையே ஓட ஓட விரட்டிய சம்பவம் இதற்கு உதாரணமாக உள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர், இதற்கு தீர்வு காணவில்லை எனில், தமிழகம், ரவுடிகளின் புகலிடமாக மாறிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சாதாரண விவசாயிகள் நடத்தும் எரிவாயு குழாய் பதிப்பதை தடுக்கும் போராட்டங்களுக்கு, ஆயிரக்கணக்கில் போலீசாரை குவிக்கும் தமிழக அரசு, இதுபோன்ற பிரச்னைகளின் போது ஏன் தயக்கம் காட்டுகிறது என்று தெரியவில்லை.
வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வந்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. அதற்கு, போலீசாருக்கு முழு சுதந்திரத்தை வழங்க வேண்டும்.