ADDED : நவ 21, 2024 11:54 PM

அனுப்பர்பாளையம்; புது பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணா நகர் பகுதியில், ஒரு பக்க ரோட்டில் பாதியளவு இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
-திருப்பூர், பி.என்., ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் முதல் அண்ணா நகர் வரை ரோட்டில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்க என அடுத்தடுத்து ரோட்டில் குழி தோண்டப்பட்டது. இதனால், ரோடு பாதியளவு மாயமாகியுள்ளது. தொடர் மழையால் மண் அரித்து தோண்டப்பட்ட பகுதி முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது.
மழை நேரங்களில் மழைநீர் ரோட்டில் தேங்கி பைக்கில் செல்பவர்கள் தொடர் விபத்தை சந்தித்து வருகின்றனர்.
அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்று பல நாட்கள் ஆகிறது. ஆனால், ரோடு புதுபிக்கப்படாமல் உள்ளது. தினசரி விபத்து என்பது சர்வசாதாரணமாக உள்ளது. ரோட்டை புதுப்பித்து விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.