/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தண்ணீருக்காக தினந்தோறும் கண்ணீர் வடிக்கிறோம்! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் ஆதங்கம்
/
'தண்ணீருக்காக தினந்தோறும் கண்ணீர் வடிக்கிறோம்! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் ஆதங்கம்
'தண்ணீருக்காக தினந்தோறும் கண்ணீர் வடிக்கிறோம்! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் ஆதங்கம்
'தண்ணீருக்காக தினந்தோறும் கண்ணீர் வடிக்கிறோம்! பி.ஏ.பி., பாசன விவசாயிகள் ஆதங்கம்
ADDED : ஜன 08, 2025 12:29 AM

பல்லடம்: தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கிறோம் என, பல்லடம் பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
பி.ஏ.பி.,யில் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பாசன விவசாயிகள், பல்லடம் பி.ஏ.பி., திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாம் மண்டல பி.ஏ.பி., பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். விவசாய சங்க நிர்வாகி ஈஸ்வரன் வரவேற்றார். பி.ஏ.பி., விவசாயிகள் ராசு, சண்முகசுந்தரம், கோகுல் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் கூறியதாவது:
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், இரண்டாம் மண்டல பாசனம் நிறைவடைந்ததும், ஜன., முதல் வாரத்தில் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்படி, பி.ஏ.பி., நீரை எதிர்பார்த்து, அதற்கேற்ப, பாசன விவசாயிகள் பல பயிர்கள் நடவு செய்துள்ளோம். மேலும், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட இது ஏதுவான காலமாகும். குறித்த காலத்தில், தண்ணீர் திறக்கப்படாமல் பயிர்கள் காய்ந்து கருகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இதனால், எண்ணற்ற விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தண்ணீர் இல்லாமல் கண்ணீர் விடவேண்டிய சூழல் உள்ளது. குறித்த நேரத்தில் பாசன நீர் திறந்து விடாமல், வேறு மண்டலத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பாசன சபை நிர்வாகிகளை கலந்த ஆலோசிக்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். பாசன விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, மூன்றாம் மண்டல பாசனத்திற்கான தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும்.
வரும், தை 1ம் தேதிக்குள் தண்ணீர் திறந்து விடவில்லை எனில், ஒட்டுமொத்த விவசாயிகளை திரட்டி, பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்டன ஆர்ப்பாட் டத்தை தொடர்ந்து, விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட பி.ஏ.பி., அதிகாரிகள், இது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.